
தேசிய அடையாள அட்டையை பெறும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய காரணிகள்
தேசிய அடையாள அட்டையினை பெற இருக்கின்ற அனைத்து விண்ணப்பதாரிகளும் உரிய விண்ணப்பத்தையும் தேவையான அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள கீழ் வரும் உத்தியோகத்தரில் ஒருவரிடம் செல்ல வேண்டும்.
01. விண்ணப்பதாரி தான் நிரந்தரமாய் வதியும் பிரிவுக்குட்பட்ட கிராம சேவகரை,
02. பெருந்தோட்டத்தில் வதிவோர் தமது தோட்ட அதிகாரியினை,
03. பாடசாலை விண்ணப்பதாரியாயின் தமது பாடசாலை அதிபரை,
இதற்கமைய தான் பெற்றுக் கொண்ட விண்ணப்பத்தை பூரணமாக்கி, தேவையான ஆவணங்களை இணைத்து மேற்காட்டிய உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். இச்சந்தர்ப்பத்தில் தான் பெற எதிர்பார்க்கும் அடையாள அட்டைக்குரிய விண்ணப்பப்படிவத்தை பாவிக்க வேண்டும்.
1. முதல் தடவை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்
(விண்ணப்பப்படிவம் இல. 01)
2. சேதமடைந்த அல்லது அடையாள அட்டை திருத்தம் மேற்கொள்ள தேவையாயின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்
(விண்ணப்பப்படிவம் இல. 08 )
3. சரியான காரணத்திற்கமைய இணைப்பிரதி தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு விண்ணப்பித்தல் (விண்ணப்பப்படிவம் இல. 07 )
01. முதல் தடவை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல்
(அ) இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
(ஆ) 16 வயது பூரணமாக இருத்தல் வேண்டும்.
முதல் தடவை அடையாள அட்டை பெறுவதற்காக ஆ.ப.தி 01 விண்ணப்பப்படிவத்தை (வெள்ளை நிறம் அல்லது வெள்ளை நிறத்தை ஒத்தது) யும் கீழ்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
1.1 விண்ணப்பதாரி 50 வயதுக்கு குறைந்தவராயின் கட்டாயமாக பிறப்பத்தாட்சிப் பத்திரத்தையோ அல்லது மேலதிக மாவட்ட பதிவாளர் மூலம் வழங்கப்பட்ட உத்தேச வயதுச்சான்றிதழ்.
* பாடசாலை விலகல் சான்றிதழ்.
* ஞானஸ்நான சான்றிதழ்.
* விண்ணப்பதாரியின் பிறந்த தினத்தை குறிப்படுகின்ற பிள்ளையின் பிறப்புச்சான்றிதழின் புகைப்படப்பிரதி.
* பிறப்புச்சான்றிதழின் கிடைத்த ஒரு பகுதி.
* இலங்கைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ். ( பிறந்த தினம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
* தோட்டத்தினை விட்டுச் சென்றமைக்கான சான்றிதழ். ( பிறந்த தினம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
* கடவுச்சீட்டில் உரிய பக்கத்தினை உறுதிப்படுத்திய பிரதி.
* தோட்ட அதிகாரி மூலம் வழங்கப்பட்ட பதிவு அட்டை.
* ஜாதக குறிப்பேடு.
1.2 பௌத்த பிக்குமார்களாயின் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்க பெற்ற சாமனேரு சான்றிதழ் அல்லது உப சம்பத்தா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
(ஏனைய குருமார்கள் தாம் குருமார் என்பதனை உறுதி செய்யும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்)
1.3 விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாயின் தனது கணவரின் பெயரினைப் பெற வேண்டுமாயின் விவாகச்சான்றிதழின் மூலப்பிரதியினையும் புகைப்படப்பிரதியினையும் இணைத்தல் வேண்டும்.
1.4 வெளி நாட்டில் பிறந்தவராயின் இலங்கை பிரஜாவுரிமையைப்பெற குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடமிருந்து பெற்ற சான்றிதழும் (CIT) அதன் பிரதியும்.
1.5 1 3/8” * 7/8 அளவுள்ள வர்ணப்புகைப்படங்கள்.
1.6 முத்திரைக் கட்டணம்
* 17 வயதுக்கு குறைந்த விண்ணப்பதாரியாயின் ரூபா 3.00 பெறுமதியான முத்திரையும்
* 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரியாயின் ரூபா 13.00 பெறுமதியான முத்திரையும்
1.7 தமது நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
* கிராம உத்தியோகத்தர் மூலம் வழங்கப்பட்ட வதிவுச் சான்றிதழ்.
இச்சான்றிதழ்கள் இல்லாதவிடத்து மட்டும் விண்ணப்பதாரியின் பெயர் குறிப்பிடப்பட்ட கீழ் வரும் ஒன்றேனும் முடிந்தளவு சமர்ப்பிக்க வேண்டும்.
• வாக்காளர் பெயர் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
• வங்கிக் கணக்கின் மாதாந்த அறிக்கையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
• தொலை பேசி கட்டண பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
• காணி அல்லது வீட்டின் உரிமை தொடர்பான உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
• வாடகை அல்லது காணி குத்தகை வீடாயின் அதற்குரிய ஒப்பந்தம்.
• வரிப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டு.
• தற்காலிக வதிவாளர் தொடர்பாக பொலிஸில் அறிவித்த கடிதத்தின் பிரதி.
1.8 தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய சேவைச் சான்றிதழ்.
02. பழுதடைந்த அடையாள அட்டைக்கான பிரதி அடையாள அட்டை பெறுதலும், அடையாள அட்டையில் உள்ள விபரத்தை திருத்தம் செய்தலும்
திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையை விண்ணப்பதாரியின் வேண்டுகோளுக்கேற்ப கீழ் வரும் காரணங்களுக்காக திருத்தம் செய்து கொடுக்கப்படும்.
1. முதற் தடவை பெற்ற தேசிய அடையாள அட்டையிலுள்ள புகைப்படத்தை காட்டிலும் தற்போது ஆளின் உருவம் வேறுபட்டிருத்தல்.
2. பெயரை மாற்றிக் கொள்வதற்கான தேவை ஏற்படல்.
3. வதிவிடம் மாறியதால் விலாசம் மாறுபடல்.
4. தொழில் வேறுபட்டிருப்பின் அல்லது தற்போதுள்ள பதவி வேறுபட்டிருப்பின் அதனை அடையாள அட்டையில் சேர்த்துக்கொள்ளல்.
5. முதல் அடையாள அட்டையில் பின் பக்கத்திலுள்ள விபரங்கள் தெளிவற்று போதல்.
6. பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை சேதமடைதல்.
7. 1972 ம் 1973 ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுக்காக புதிய அடையாள அட்டை பெறல் (1990 நவம்பர் மாதம் 20 ம் திகதி 673/6 இலக்க விஷேட வர்த்தமானி மூலம் இந்த வருடங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.)
தேசிய அடையாள அட்டையை திருத்தம் செய்து கொள்ள ஆ.ப.தி.வி.08 விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்த வேண்டும். (இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தால் அச்சிடப்பட்ட விண்ணப்பம்). இதனோடு கீழ்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2.1 தற்போது பாவிக்கின்ற அடையாள அட்டை.
2.2 1 3/8” * 7/8 அளவான வர்ணப் புகைப்படம் ஐந்து.
2.3 15 ரூபா பெறுமதியான முத்திரை.
2.4 தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய சேவைச்சான்றிதழ்(03 மாத காலத்தினை கொண்டதாக இருத்தல் வேண்டும்).
வாண்மைத் தொழில் புரிவோர் தமது தொழிலை உறுதிப்படுத்த அதற்குரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தகராயின் தமது வர்த்தக நிறுவனப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்திய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
2.5 தற்போது பாவிக்கின்ற தேசிய அடையாள அட்டையின் இலக்கம் தெளிவற்றதாயின் அந்த இலக்கம் பாவித்தமை தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் (சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு)
2.6 தற்போது பாவிக்கின்ற தேசிய அடையாள அட்டையின் பெயர், பிறந்த தினம் மற்றும் பிற விபரங்கள் வேறுபடல் அல்லது பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதியை அல்லது 1.2 பந்தியில் குறிப்பிடப்பட்ட மாற்று ஆவணங்களை மூலப்பிரதிகளுடன் சமர்ப்பிக்கவும்.
2.7 பௌத்த பிக்குமார்களின் பெயர்களாயின் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பெற்ற சாம நேர சான்றிதழ் அல்லது உப சம்பதா சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனைய மதகுருமார் தாம் குருமார் என்பதை உறுதி செய்யும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2.8 துறவறத்திலிருந்து சாதாரண வாழ்விற்கு திரும்பியவராயின் பௌத்த சமய அலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பெற்ற சாதாரண வாழ்விற்கு திரும்பிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
2.9 வேறு பெயர்களை தமது தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட வேண்டுமாயின், சமாதான நீதிவானிடமிருந்து பெற்றுக் கொண்ட சத்தியக் கடதாசி, தாம் குறிப்பிட விரும்பும் வேறு பெயர்கள் பாவிக்கின்றமைக்கான எழுத்து மூல சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
03. காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கான இணைப்பிரதியைப் பெறல்
தேசிய அடையாள அட்டை காணாமல் போன அதற்கான இணைப்பிரதி பெற ஆ.ப.தி.வி 07 என்ற விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்த வேண்டும். (பச்சை நிறமோ அல்லது பச்சை நிற எழுத்துக்களால் அச்சிடப்பட்ட விண்ணப்பம்). அத்தோடு கீழ் வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
3.1 தேசிய அடையாள அட்டை காணாமல் போன பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் மூலப்பிரதி (ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்)
3.2 1 3/8” * 7/8 அளவான வர்ணப் புகைப்படம் ஐந்து.
3.3 15 ரூபா பெறுமதியான முத்திரை.
3.4 பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏலவே 1.2 இல் குறிப்பிடப்பட்ட மாற்று ஆவணங்கள்.
3.5 தனது தொழிலை அடையாள அட்டையில் குறிப்பிட வேண்டுமாயின் அதற்குரிய சேவைச்சான்றிதழ்(03 மாத காலத்தினை கொண்டதாக இருத்தல் வேண்டும்). வாண்மைத் தொழில் புரிவோர் தமது தொழிலை உறுதி செய்வதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக வைத்தியர், கணக்காளர், சட்டத்தரணி, பொறியியலாளர் போன்றோர் தமது வாண்மைத் தொழில் புரிவோர் பட்டப் படிப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தகராயின் தமது வர்த்தக நிறுவனப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்திய பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
3.6 காணாமல் போன அடையாள அட்டை இலக்கம் பாவித்தமைக்கான உறுதிப்படுத்தும் ஆவணங்கள். உதாரணமாக வங்கிப் புத்தகம், கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் போன்ற ஆவணங்கள்.
3.7 கிராம உத்தியோகத்தர் மூலம் பெறப்பட்ட பதிவுச் சான்றிதழ்.
3.8 துறவறத்திலிருந்து சாதாரண வாழ்விற்கு திரும்பியவராயின் பௌத்த சமய அலுவல்கள் திணைக்களத்தில் இருந்து பெற்ற சாதாரண வாழ்விற்கு திரும்பிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
காணாமல் போன அடையாள அட்டைக்காக இணைப்பிரதி பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பழைய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்களே குறிப்பிடப்பட வேண்டும். (ஏலவே இருந்த அடையாள அட்டை பெறுவதில் மதகுருமாருக்கு இதில் விதி விலக்குண்டு.
உங்களுக்கு கிடைக்கும் தேசிய அடையாள அட்டையை உடன் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் வித்தியாசம் இருப்பின், அதனைக் குறிப்பிட்டு கிடைக்கப் பெற்ற அடையாள அட்டையுடன் கடிதத்தை எமது திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவும். பிழையை சரி செய்ய வேண்டுமாயின் இரு மாத காலத்திற்குள் அடையாள அட்டை அனுப்ப வேண்டும்.அடையாள அட்டை கிடைத்து இரண்டு மாதத்திற்கு மேற்படின் அதிலுள்ள பிழையைத் திருத்த திருத்தம் செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.