
ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பதாரி அதே நாளில் தனது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை நாட்களில் காரியாலய நேரத்தில் (முற்பகல் 8.30 இலிருந்து) இவ் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு நாள் சேவைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் மு.ப 8.30 முதல் பி.ப 12.00 மணி வரையாகும்.
வழங்கப்படும் சேவைகள்
• புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல்
• திருத்தம் செய்வதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல்
• இணைப்பிரதி (காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கானது) பெற்றுக் கொடுத்தல்.
கட்டணம் ரூபா 500
செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 06:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது