Sinhala Tamil
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sri Lanka Goverment
மேலோட்டப்பார்வை

மேலோட்டப்பார்வை

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை பூர்த்தி செய்வதற்கு நாட்டில் சட்ட ஒழுங்கைப் பேண உதவும் பொருட்டு ஆட்களின் அடையாளத்தை நிறுவும் ஒரு ஆவணம் ஆகிய தேசிய அடையாள அட்டையை வழங்கும் செயன்முறையின், இதன் சம்பந்தப்பட்ட தொழிற்பாடுகளை ஆற்றுதல் ஆகும்.

இலக்கு

பிரஜைகளின் ஆளடையாளத்தை நம்பகத்தன்மையுடன் உறுதி செய்து, மக்கள் மனம் கவர்ந்த சேவை வழங்குநராக ஆகுதல்.

செயற்பாடு

1968 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டம், மற்றும் 1981 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டம் என்பவற்றிற்கு அமைய 16 வயது பூரணமான  இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் செயற்திறனும் பாதுகாப்பும் கொண்டதாக பதிவு செய்து அடையாள அட்டையை விநியோகித்தல்.

நோக்கம்

1981 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, 1971 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க மற்றும் 37 ஆம் இலக்க சட்டங்களின் திருத்தம் ஆட்பதிவு செய்யும் சட்டத்திற்கு அமைய ஆட்களைப் பதிவு செய்து, அடையாள அட்டை விநியோகித்தலை பிரதான நோக்காகக் கொண்ட இந்த திணைக்களம் ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்யும் பிரதான ஆவணமான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும்போது 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் வண்ணம் முறையான முகாமைத்துவத்தின் மூலம் பொறுப்பை நிறைவேற்றுவதுடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நடைமுறையிலுள்ள சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்கும் வண்ணம் அரச நிருவாகத்திற்கு அவசியமான சூழ்நிலையை உருவாக்குவதை எதிர்பார்க்கின்றது.


பொறுப்புக்கள்

*16 வயது பூரணமான  இலங்கைப் பிரஜைளைப் பதிவுசெய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
*திணைக்களத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாளஅட்டைகளுக்கு தேவையான போது தேவையான திருத்தங்களைச் செய்தல்.
*காணாமல்போன அடையாளஅட்டைகளுக்கான இணைப்பிரதி அடையாளஅட்டைகளை வழங்குதல்.
*நிறுவனங்கள், திணைக்களங்கள் என்பன விடுக்கும் வேண்டுகோளுக்கு அமைய அடையாளஅட்டை தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்தல்.
*பொலிஸ் உறுதிச்சான்றிதழுக்கான தகவல்களை வழங்குதல்.
*அடையாளஅட்டை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களை அறிவூட்டல்.

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011 07:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

விண்ணப்ப விசாரணைகள்

செய்திகள்

குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிதல் குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிதல் தற்போது நீங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒரு குறுஞ்செய்தியை... Read more